இலங்கையின் கடன் குறைப்பு தொடர்பில் முக்கிய தீர்மானம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் கடனை குறைப்பது தொடர்பில் இலங்கைக்கு கடனை வழங்கிய ஜப்பான் இந்தியா பிரான்ஸ்போன்ற நாடுகள் ஒக்டோபர் மாத இறுதிக்குள் பரந்துபட்ட உடன்பாட்டை எட்டக்கூடும் என ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜப்பான் இந்தியா சீனா உட்பட அதற்கு கடன் வழங்கிய நாடுகளுடன் தனது வெளிநாட்டு கடன் தொடர்பில் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், மொராக்கோவில் சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாடுகள் ஒக்டோபர் மாத இறுதியில் இடம்பெறவுள்ளது. அக்காலப்பகுதியில் இலங்கையுடன் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள அமெரிக்கா ஜப்பான் இந்தியா ஆகிய நாடுகள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையிலேயே ஒக்டோபர் மாத இறுதிக்குள் உடன்பாடு ஒன்று எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.