ஆன்லைன் பாதுகாப்பு மசோதா, பயங்கரவாத எதிர்ப்பு மசோதா ஆகிய இரண்டுமே அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது!
ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு மசோதா மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மசோதா ஆகிய இரண்டும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் அண்மையில் வெளியிட்டிருந்தது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பிலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த மசோதாவால் இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரம் மட்டுமின்றி, மக்களின் உண்மையை அறியும் உரிமையும், சிந்தனைச் சுதந்திரமும் இந்த மசோதாவால் கட்டுப்படுத்தப் படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு மசோதாக்களையும் நாம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்க வேண்டும், இல்லையெனில் இந்த மசோதாக்கள் ஒருமுறை நிறைவேற்றப்பட்டால், அது பல தசாப்தங்களுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.