விரைவில் பொதுவெளியில் தோன்றவுள்ள துவாரகா : வெளியான ஊடக அறிக்கை!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர் அவர்களின் மகள் துவாரகா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இது குறித்த ஊடக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அவ்வறிக்கையில், தாயக விடுதலைப்போரில் இறுதிவரை போராடி தன் இன்னுயிரையும் ஈந்தளித்த தேசிய தலைவரின் ஒரே மகளான துவாரகா பிரபாகரனாகிய நான், தமிழீழ விடுதலைப்போரில், முழுமையான போராளியாக கடமையாற்றியவள் என்ற ஒரே தகுதியுடன் இவ்வாக்குமூலத்தை இணைய பரப்பிற்கு பகிர்கின்றேன்.
நான் கூறும் தகவல்கள், அதிர்ச்சியாகவும், நம்ப முடியாதவையாகவும் இருக்கலாம். ஆனால் உண்மைகள் எப்போதும் தாமதமாகவே உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும். சர்வதேச அரச தலைமைகளின் கட்டமைப்பை புரிந்தவர்களுக்கு நிச்சயம் இது புரியும். உலகின் மிக முக்கிய தலைவர்கள், அனைவரும் தமது உருவ அமைப்பை ஒத்த பிரதிகளை தம்முடன் உலாவ வைத்திருப்பார்கள்.
அடோல்ப் ஹிட்லரைப்போல நான்கு பேர் இருந்ததை இந்த உலகமே அறியும். இக்கடிதத்தின் மூலம் தமிழ்த் தேசிய ஆதரவாளருக்கு நான் பகிரவிரும்பும் உண்மை, எனது தம்பியும், தேசிய தலைவரின் கடைசி மகனுமாகிய பாலச்சந்திரன் பிரபாகரன் முழு தேக ஆரோக்கியத்துடன், எமது குடும்பத்துடன் இணைந்திருக்கின்றார். நானும் எனது தம்பியும் எதிர்வரும் மாவீரர் நாளுக்கு இந்த உலகத்தின் கண்களுக்கு பிரசன்னமாவோம்” எனத் தெரிவித்துள்ளார்.