ரஷ்யாவிற்கு எதிராக ஒரு புதிய படை வருவதற்கான அறிகுறிகள்
#world_news
#Russia
#Ukraine
Prathees
2 years ago
ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் ராணுவத்தின் தலைமை குறித்து தற்போது சமீபத்திய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த செய்திகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் வாக்னரின் இராணுவத்தின் முன்னாள் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஷின் மகன் புதிய தலைவராக வருவதற்கு தயாராகி வருவதாக கூறுகின்றன.
இதன்படி, வாக்னர் இராணுவத்தின் கட்டுப்பாடு மற்றும் பிரிகோஷின் அனைத்து சொத்துக்களும் அவரது மகனுக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Pavel Prigoshin என அழைக்கப்படும் அவருக்கு தற்போது 25 வயது எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் மாஸ்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் வாக்னரின் இராணுவத்தின் முன்னாள் தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் கொல்லப்பட்டார்.
அதன்பிறகு, வாக்னரின் படைக்கு எந்த தலைவரும் பெயரிடப்படவில்லை.