ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் கீழே தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

கதுருவெலயிலிருந்து மெதிரிகிரிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.  குறித்த பேருந்து கிரித்தல குளத்துக்கு அருகில் உள்ள வளைவில் சென்றுகொண்டிருந்தபோதே அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். 

படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர். 

மின்னேரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்வர்ணலதா என்ற 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து பஸ் சாரதி மின்னேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!