உடன் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால மருந்து கொள்வனவை நிறுத்த நடவடிக்கை!
#SriLanka
#Keheliya Rambukwella
#drugs
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அவசரகால மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மருந்து பொருட்கள் கொள்வனவு, மற்றும் தரமற்ற மருந்து கொள்வனவு காரணமாக பல பிரச்சினைகளை சுகாதாரத்துறை எதிர்நோக்கியது.
இந்நிலையில், இதனை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு பின்னர் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.