ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் மஸ்க்!
#SriLanka
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார். சுதந்திரமான பேச்சுரிமையை நசுக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கனடாவில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகளை ஒழுங்குமுறை படுத்துவதற்காக அரசாங்கதினால் முறையாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவு அண்மையில் வெளியானது.
இந்நிலையில், இது குறித்து மூத்த ஊடகவியலாளர் ஒருவரின் இடுகைக்கு பதிலளித்துள்ள மஸ்க் மேற்படி விமர்சித்துள்ளார்.
கனடாவில் பேச்சுரிமையை நசுக்க ட்ரூடோ முயற்சிப்பதாகவும், இதுவொரு வெட்கக்கேடான செயல் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதேவேளை ட்ரூடோ அராசாங்கம் பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுகிறது என பலமுறை குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.