புத்தளத்தில் கர்பிணி பெண் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து!
#SriLanka
#Accident
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி கடவையில் பயணித்த கர்ப்பிணிப் பெண் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த அவந்தி கருணாரத்ன என்ற தாதி ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பணி நிமித்தமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த போது அவர் விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி அதிக குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.