அஜர்பைஜானில் இருந்து வெளியேறிவரும் மக்கள்!
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சமீபத்தில் அஜர்பைஜானின் கட்டுப்பாட்டில் இருந்த நாகோர்னோ-கரபாக் பகுதியில் வசித்து வந்த ஏராளமான ஆர்மேனியர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சரணடைவதற்கு முன்பு, அந்தப் பிராந்தியத்தில் சுமார் 120,000 ஆர்மேனியர்கள் இருந்ததாகவும், இப்போது அவர்களில் சுமார் 100,000 பேர் ஆர்மீனியாவுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளைஅஜர்பைஜானுக்கு உட்பட்ட நகோர்னா கராபாக்கில், கடந்த 30 ஆண்டுகளாக தனி நாடு கோரி அர்மேனிய இன மக்கள் போராடி வந்த நிலையில், அஜர்பைஜான் அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையால் தனி நாடு கோரிக்கையை கைவிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.