உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த இலங்கை பல்கலைக்கழகங்கள்
#SriLanka
#sri lanka tamil news
#University
#World
#Rank
Prasu
2 years ago
2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இலங்கையின் ஆறு பல்கலைக்கழகங்கள் இணைந்துள்ளன.
குறித்த தரவரிசைப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள 108 நாடுகளைச் சேர்ந்த 1,904 பல்கலைக்கழகங்கள் இடம்பெறுகின்றன.
இதன்படி, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பன குறித்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் என்பனவும் 2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.