முன்னாள் பிரதம நீதியரசரின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள்

#SriLanka #Police #Investigation #Robbery
Prathees
2 years ago
முன்னாள் பிரதம நீதியரசரின் வீட்டிற்குள்  புகுந்த திருடர்கள்

கட்டான பிரதேசத்தில் உள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 கடந்த 27ஆம் திகதி இரவு வீட்டுக்குள் புகுந்த குழுவினர், பித்தளை யானை, தாஜ்மஹாலின் சிறிய பிரதி உள்ளிட்ட 27 பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். 

 முன்னாள் பிரதம நீதியரசர் தற்போது கொழும்பில் வசிக்கும் நிலையில், அவரது கட்டானே வீட்டிற்குள் பின்கதவை உடைத்து திருடர்கள் நுழைந்துள்ளனர். 

 ஒரு வாட்ச்மேன் பகலில் மட்டும் தங்கி நிலம் மற்றும் வீட்டைப் பார்க்கிறார், திருட்டு நடந்ததையடுத்து காலையில் வந்த வாட்ச்மேன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!