இராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்கத்திட்டம்
#SriLanka
#government
#Sri Lankan Army
Prathees
2 years ago
2030ஆம் ஆண்டுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போது இரண்டு லட்சத்தைத் தாண்டியிருக்கும் ராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை பாதியாகக் குறைப்பதே அரசின் இலக்கு.
2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிடுகின்றார்.
கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தேசித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.