பாகிஸ்தானில் திடீரென மூடப்பட்ட 56,000த்துக்கும் அதிகமான பாடசாலைகள்

#School #government #Pakistan #Disease #closed
Prasu
2 years ago
பாகிஸ்தானில் திடீரென மூடப்பட்ட 56,000த்துக்கும் அதிகமான பாடசாலைகள்

பாகிஸ்தானில் உள்ள 56,000த்துக்கும் அதிகமான பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாக பரவும் கண் அழற்சிப் பரவலைக் கட்டுப்படுத்த இவ்வாரம் முழுதும் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து 357,000 கண் அழற்சி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதைத் தொடர்ந்து மில்லியன் கணக்கான மாணவர்கள் நேற்று முதல் வீட்டிலேயே இருப்பார்கள். கண் அழற்சி காரணமாகக் கண்கள் சிவந்து போவது, அரிப்பு ஏற்படுவது, நீர் கசிவது ஆகியவை ஏற்படுகின்றன.

 தொடர்பு வழியாகவும், சளி, இருமல் வழியாகவும் கிருமி பரவுகிறது. கிருமிக்கு எதிராக மாணவர்களைப் பாதுகாக்கப் பள்ளிகள் மூடப்படுவதாகப் பஞ்சாப் மாநிலத்தின் கல்வித்துறை கூறியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!