கீரி சம்பா தட்டுப்பாட்டின் ரகசியம் அம்பலமானது! அடுத்த வாரம் நடவடிக்கை எடுக்கப்படும்: வர்த்தக அமைச்சர்
#SriLanka
#rice
#prices
Prathees
2 years ago
அரிசி ஆலை உரிமையாளர்கள் சேமித்து வைத்துள்ள கீரி சம்பாவை மொத்த வியாபாரிகள் கொள்வனவு செய்ய மறுத்துள்ளமையினால் நாடு முழுவதும் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.
இந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒவ்வொரு வருடமும் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த வர்த்தக அமைச்சர், அரிசி ஆலை உரிமையாளர்களின் இந்த பிரச்சினைக்கு அடுத்த வாரம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மொத்த வியாபாரிகள் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் அதிக விலை கொடுத்து அரிசியை வாங்கினால், அந்த வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை எடுக்கும் முடிவுகளால், சிக்கலில் சிக்காமல் இருக்க அதிக விலை கொடுத்து சம்பாவை வாங்கத் தயங்குவதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.