பொல்கொல்ல அணையின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
#SriLanka
#weather
#water
Prathees
2 years ago
மேல் மகாவலி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பொல்கொல்ல மகாவலி அணையின் மேலும் 02 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி இதுவரை திறக்கப்பட்டுள்ள மொத்த வான் கதவுகளின் எண்ணிக்கை 04 ஆகும்.
நேற்று (27) பிற்பகல் முதல் பெய்து வரும் அடை மழையினால் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த பொல்கொல்ல மகாவலி அணையின் வான்கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கீழ் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறந்து விடப்படவுள்ளதால், அணைக்கு கீழே உள்ள மகாவலி ஆற்றை பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு பொல்கொல்ல மகாவலி அணையின் நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.