சிறுமிகளின் ஆபாசப் படங்களை விற்ற இளைஞர் கைது
#SriLanka
#Arrest
Prathees
2 years ago
பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய ஆபாச படங்களை விற்பனை செய்த 24 வயது இளைஞன் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் அந்தப் பிரிவின் சமூக ஊடகப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிக்குவிற்கு ஆபாசமான காட்சிகளை விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரின் கைத்தொலைபேசியில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய சுமார் 7000 காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.