இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பு – மன்னாரை சேர்ந்த மூவர் யாழில் கடற்படையினரால் கைது.
#SriLanka
#Mannar
#Fisherman
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
மன்னாரை சேர்ந்த மூவர் யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று புதன் (27) இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த நிலையில் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் இரவு நேரத்தில் பல படகுகள் சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பதாக கடற்படையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் பல படகுகள் தடை செய்யப்பட்ட கடலட்டை தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.