கிளிநொச்சி மாவட்டத்தின் சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவிகள் தேசிய ரீதியில் சாதனை
#SriLanka
#Kilinochchi
#Event
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
17 வயதிற்குட்பட்ட பெண்கள் கபடி அணியினர் இம்முறை நடைபெற்ற தேசிய ரீதியிலான கபடி போட்டியில் முதலாம் இடத்தை பெற்று சாதனையை நிலை நாட்டினர்.
இரண்டாவது வருடமாகவும் தொடர்ந்து முதல் நிலையை இப்பாடசாலை தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இச் சாதனையை கௌரவிக்குமுகமாக இன்றைய தினம் (28) கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பிரபல்யமான ஸ்ரீ ராம் நகை கடையின் உரிமையாளர் சாதனை புரிந்த அனைத்து வீராங்கனைகளையும் கௌரவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.