சிங்கள இளைஞன் சாரம் அணிவதற்கு வெட்கப்படக்கூடாது: நாமல்

#SriLanka #Namal Rajapaksha
Prathees
2 years ago
சிங்கள இளைஞன்  சாரம் அணிவதற்கு வெட்கப்படக்கூடாது: நாமல்

நாட்டின் பழைய அல்லது நவீன தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாட்டின் தற்போதைய கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 தங்காலை கிளைச் சங்கம் ஸ்தாபிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,

 கலாச்சாரத்தை மதிக்கும் குழந்தையை சமுதாயத்திற்கு விட்டுச் செல்வது பெற்றோரின் பொறுப்பு. 

சிங்களம், தமிழ், முஸ்லீம் அல்லது பர்கர் என எந்த கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு குழந்தைகளை உருவாக்க வேண்டும்.

 அது பெற்றோர்களாகிய நமது கடமையும் பொறுப்பும் ஆகும். முஸ்லீம் குழந்தை முஸ்லீம் கலாச்சாரத்திற்கு ஏற்ப உடுத்துவதற்கு வெட்கப்படக்கூடாது, தமிழ் இளைஞன் வேட்டி அணிவதற்கு வெட்கப்படக்கூடாது, அல்லது ஒரு சிங்கள இளைஞன் சாரம் அணிவதற்கு வெட்கப்படக்கூடாது.

 கலாச்சாரம் மற்றும் மதத்தை மதிக்கும் சமூகம் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான பலன்களை அடைய முடியும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!