இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்தார். 

2020 ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் 52% இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டிய அவர், 18- 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இஸ்கிமிக் எனப்படும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். 

மேலும் அவசரகால கொள்முதல் முறைகள் மூலம் பொதுவான மருத்துவ நிலைமைகளுக்கான மருந்துகளைப் பெறுவதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!