அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் அபிவிருத்தி செய்ய முடியாது!

#SriLanka #government #Development
Prathees
1 year ago
அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் அபிவிருத்தி செய்ய முடியாது!

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் வினைத்திறன் மற்றும் பயனுள்ள சேவையை வழங்க முடியும் என ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

 உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளை ஆராயும் போது அரசாங்க வர்த்தகம் செய்யும் நாடுகள் பின்தங்கிய பொருளாதாரத்தில் உள்ளதாகவும் அரசாங்கம் வர்த்தகம் செய்யாத நாடுகள் அபிவிருத்தியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 'புதிய அபிவிருத்தி அணுகுமுறைக்காக அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல்' என்ற தலைப்பில் நிதியமைச்சில் நடைபெற்ற புலமையாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இதனைத் தெரிவித்தார்.

 நாடு மிகவும் இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் இவ்வேளையில், நாட்டின் பொருளாதாரத்திற்கு தாங்க முடியாத சுமையாக உள்ள நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொழிற்சங்க தலைவர்கள், சிவில் அமைப்பு ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பணித் தளத்தில் உள்ள மக்களுக்குத் தெரிவிக்க இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 2010-2020 பத்து வருட காலப்பகுதியில் இலங்கை புகையிரத திணைக்களத்தின் செயற்பாட்டிற்காக 333 பில்லியன் ரூபா பாரியளவிலான பொதுப் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் சமன் ரத்னப்பிரிய வெளிப்படுத்தினார்.

 இவ்வளவு பொதுமக்களின் வரிப்பணத்தை செலவழித்து நடத்தப்பட்ட இந்த அரச நிறுவனத்தை இலாபம் ஈட்டும் தொழிலாக கட்டியெழுப்பினால் வருடத்திற்கு சுமார் 30 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை மறுசீரமைக்க அரசாங்கம் தயாராக உள்ளதா என்ற தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரத்னப்பிரிய, அது குறித்தோ அல்லது அவ்வாறான செயற்பாடுகள் குறித்தோ அரசாங்கத்திற்கு எந்த யோசனையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

 இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட அடுத்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்தை கூடுதலாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!