மேலும் சில ரஷ்ய நிறுவனங்கள் மீது தடை விதிக்கும் அமெரிக்கா!
#world_news
#Russia
#Ukraine
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ரஷ்யாவையும் சேர்ந்த மேலும் பல நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிறுவனங்கள், ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்க உதவியதாக கூறப்படுகிறது. தடை விதிக்கப்பட்ட 9 நிறுவனங்கள் ஆளில்லா வானூர்திகளைத் தயாரிப்பதற்கான பாகங்களை ரஷ்ய ராணுவத்துக்குக் கொடுத்ததாக அமெரிக்க வர்த்தகத்துறை கூறியுள்ளது.
மத்தியக் கிழக்கிலும் உக்ரேனிலும் தாக்குதல் நடத்த அவை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே மேலும் சில நிறுவனங்கள் மீது தடை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே