ஈராக்கில் திருமண நிகழ்வில் நேர்த்த துயரம் : 100 பேர் பலி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வடக்கு ஈராக்கில் திருமண விழா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில் மணமகனும், மணமகளும் உள்ளடங்குவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.