விமானப்படை தளத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் வெளியான மேலதிக தகவல்கள்
#SriLanka
#Lanka4
#BombBlast
#Air Force
Prathees
2 years ago
கல்பிட்டி கந்தகுளிய விமானப்படை தளத்தில் இன்று (26) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெடிப்பிட்டிய விமானப்படை தளத்தில் இடம்பெற்ற வெடிவிபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெடிகுண்டு செயலிழக்கும் இடத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வெடிவிபத்தில் 28 வயதுடைய விமானப்படை வீரர் உயிரிழந்தார்.
மற்றொரு விமானப்படை வீரரும் இந்த வெடி விபத்தில் காயமடைந்துள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விமானப்படையினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.