பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
புளத்சிங்களவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (26.09) காலை இடம்பெற்றுள்ளது.
புளத்சிங்கள கலஹேன பிரதேசத்தில் வசிக்கும் கொக்கல ஆராச்கே ரம்ய குமார என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் இருந்து தவறி விழுந்த இவர், பலத்த காயமடைந்த நிலையில், ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சைப் பலனிற்றி அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.