சீனாவின் ஆராய்ச்சி கப்பலுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை!
#SriLanka
#China
#Ali Sabri
#Lanka4
#Tamilnews
Thamilini
2 years ago
ஷி யான் 6 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பலை இலங்கையில் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் இலங்கை வரும் குறித்த கப்பலை இலங்கையில் நிறுத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர், அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய செய்திச் சேவையான ஏஎன்ஐயிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இலங்கைக்கு வருவது தொடர்பில் இந்தியா முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.