மலையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிய லொறி.. 3 பேர் மருத்துவமனையில்

#SriLanka #Accident #NuwaraEliya
Prathees
2 years ago
மலையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிய லொறி.. 3 பேர் மருத்துவமனையில்

நுவரெலியாவில் இருந்து மெராயா நோக்கி பயணித்த லொறி ஒன்று கிரிமட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் காயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 லொறி வீதியை விட்டு விலகி 40 அடி சாய்வில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் நானுஓயா பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

 லொறியை செலுத்தும் போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!