மலேசியாவில் உயிரிழந்த இலங்கையர்கள் : சந்தேகநபர்கள் பொலிஸில் சரணடைந்தனர்!
#SriLanka
#Lanka4
#Malasia
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் மலேசிய பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் இலங்கையர்கள் என மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதிக்கு சொந்தமான கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து உயிரிழந்த மூன்று இலங்கையர்களின் சடலங்கள் அண்மையில் மீட்கப்பட்டது.
உயிரிழந்த மூவரில் ஒருவர் வீட்டினைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் எனவும், மற்றைய இருவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.