கத்தோலிக்க திருச்சபையின் பங்கு பணிமனை திறப்பு விழா
#SriLanka
#Kilinochchi
#Mullaitivu
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
கத்தோலிக்க திருச்சபையின் பங்கு பணிமனை திறப்பு விழா இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தூய சவேரியார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட குறித்த பணிமனை கட்டடம் இன்றைய தினம் 25.09.2023 யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் அவர்களின் ஆசீர்வாதத்துடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஆலய பங்குத்தந்தை நிக்சன் கொலின் மற்றும் பங்குத்தந்தைகள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமச்சர் ரி. குருகுலராஜா, கிராம சேவையாளர், சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.