முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு 5 வருட கடூழியச் சிறை தண்டனை..

#SriLanka #Police #Court Order #Prison
Prathees
2 years ago
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு 5 வருட கடூழியச் சிறை தண்டனை..

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சேதம் விளைவித்து சாந்த தொடங்கொடவை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என கஹவத்தை பொலிஸ் நிலையத் தளபதிக்கு அழுத்தம் கொடுத்தமைக்காகவே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற கஹாவத்தை கொலைச் சம்பவம் தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க விசேட புலனாய்வுப் பிரிவினரால் 2017ஆண்டு கைது செய்யப்பட்டார்.

 2015 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மேடையை அலங்கரித்துக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரான சாந்த தொடங்கொட (57) சுட்டுக் கொல்லப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!