தாய்லாந்தில் 03 குழந்தைகளை கொலை செய்தவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

#world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தாய்லாந்தில் 03 குழந்தைகளை கொலை செய்தவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

தாய்லாந்தில் மூன்று குழந்தைகளை கொன்ற தந்தைக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். 

சந்தேகநபரான சோன்சக் சாங்சிங், தனது முந்தைய திருமணத்தில் இருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கடந்த வாரம் இரண்டு வயது சிறுமியின் சடலம் அவரது வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

தமக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தைகளின் அழுகையை தாங்கிக் கொள்ள முடியாது எனவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

இந்த கொலைகள் தொடர்பாக அவரது தற்போதைய மனைவி மற்றும் முன்னாள் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!