எம்பிலிபிட்டிய பகுதியில் நீராடச் சென்ற குழந்தை உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
எம்பிலிபிட்டிய, சந்திரிகா ஏரியின் மதகுக்கு அருகில் நீராடச் சென்ற குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை தனது தாய் மற்றும் இருவருடன் அந்த இடத்தில் நீராடச் சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் குழந்தையை சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த குழந்தை எம்பிலிபிட்டிய பிரதேசத்தின் கனமடியார பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.