கிழக்கு மாகாண ஆளுநரை அவசரமாக சந்தித்த சாணக்கியன்! காணிப்பிரச்சனைக்கு தீர்வு வருமா?

#SriLanka #Tamil People #Governor #Tamilnews #sri lanka tamil news #sanakkiyan
Mayoorikka
2 years ago
கிழக்கு மாகாண ஆளுநரை அவசரமாக சந்தித்த சாணக்கியன்! காணிப்பிரச்சனைக்கு தீர்வு வருமா?

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்துவரும் அறவழிப் போராட்டத்திற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் வரவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக அவரிடம் ஆவணம் கையளிக்கப்பட்டது என மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

 நேற்று(24.09) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் ஆகியோர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானை சந்தித்து கோரிக்கை கடிதத்தை வழங்கியுள்ளனர்.

 தமது அவசரமாக சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைக்யை ஆளுநர் ஏற்றுக்கொண்டு தம்மை சந்தித்தாக சாணக்கியன் மேலும் கூறியுள்ளார்.

 “மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட இவ் காணிகள் ஆளுநரின் அதிகாரத்துக்கு அப்பாற்ப்பட்டு நேரடியாக கபினட் அமைச்சருக்குள் வருவதனால் இப் பிரச்சனை சம்பந்தமாக ஆளுனரால் தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியாது. 

அதே சமையம் இதற்கான தீர்க்கமான முடிவை எடுக்கும் நோக்கில் கபினட் அமைச்சர் அல்லது ஜனாதிபதியினை நேரடியாக சந்திக்க தீர்மானித்திருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. 

அதோடு திருகோணமலை மாவட்டம் சம்பந்தப்பட்ட தொல்பொருள் மற்றும் காடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமாகவும் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது” என சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!