ஈஸ்டர் தாக்குதல் : சர்வதேச விசாரணை தேவையில்லை - பேராயர்!
#SriLanka
#Easter Sunday Attack
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (24.09) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "தலைவர்கள் விசாரணைக்கு தலைமை தாங்கினால், அவர்கள் நேர்மையாக செயல்பட்டால், உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டறிய நேர்மையான அதிகாரிகள் மூலம் முயற்சிகளை முன்னெடுத்தால் சர்வதேச விசாரணை தேவையில்லை. இல்லையென்றால் சர்வதேச விசாரணைக்கு செல்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.