கம்பளையில் பஸ்ஸை நிறுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தல்

#SriLanka #government #kandy #Bus #Driver
Prasu
2 years ago
கம்பளையில் பஸ்ஸை நிறுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தல்

கம்பளை பிரதேசத்தில் பஸ் சாரதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். 

இன்று (24) காலை மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது வேன் ஒன்றை நிறுத்தி பஸ்ஸுக்கு தடையை ஏற்படுத்தியே அதன் சாரதியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்டவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 யார் என்ன காரணத்துக்கு இந்த கடத்தலை மேற்கொண்டனர் என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!