நைஜீரியாவின் எரிபொருள் கிடங்கில் தீவிபத்து : 34 பேர் பலி!

#world_news #Lanka4 #fire #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நைஜீரியாவின் எரிபொருள் கிடங்கில் தீவிபத்து : 34 பேர் பலி!

நைஜீரியாவின் பெனினில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. 

உயிரிழந்தவர்களில் இரண்டு சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த எரிபொருள் களஞ்சியசாலை சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்ததாக கூறப்படுவதுடன். தீவிபத்திற்கான காரணம் தெரியவரவில்லை. 

எரிபொருள் சேமிப்பு கிடங்கு வெடித்த போது கார், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட பல வாகனங்கள் எரிபொருளைப் நிரப்புவதற்காக நின்றுக்கொண்டிருந்ததாகவும், கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த  சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!