அரச சேவைக்கு ஆட்சேர்ப்பது தொடர்பில் முக்கிய தீர்மானம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அரச சேவைக்கு ஆட்சேர்ப்பது தொடர்பில் முக்கிய தீர்மானம்!

அரச சேவைக்கு  ஆட்சேர்ப்பு தொடர்பில் பொது நிர்வாக,  உள்நாட்டலுவல்கள்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முக்கிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இது குறித்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. 

இதன்போது மாகாண அரச சேவையில் அதிகாரிகளை முறையாக ஈடுபடுத்தாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

 அதற்கமைய.  பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அதிகாரிகளையும் முறையாக ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  அதிகாரிகளுக்குப் பிரதமர் ஆலோசனை வழங்கினார். 

 அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் புதிய தீர்மானம் இல்லை என்பதால், மாகாண மற்றும் மொத்த அரச சேவையில் வெற்றிடங்கள் காணப்படுவதாலும்,  அந்த வெற்றிடங்களை முகாமைத்துவ சேவை மூன்றாம் வகுப்பு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் உயர்ந்த புள்ளிகளை பெற்று தற்பொழுது நியமனம் பெற்றுள்ள அதிகாரிகளை அந்த வெற்றிடங்கள் காணப்படும் பதவிகளுக்கு நியமிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!