இலங்கையில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Dengue
Thamilini
2 years ago
இலங்கையில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 2000 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது

அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

முன்னைய மாதங்களை விட இம் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என சுகாதார திணைக்களம் கணித்திருந்தது. இருப்பினும்  இந்த  மாதத்தின் மூன்றாவது வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,881 ஆக அதிகரித்துள்ளது.

டெங்கு அபாய வலயங்கள் 07 ஆக குறைக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய மழையினால் அது மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!