அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு
#India
#prices
#Dollar
#Cricket
#WorldCup
#sports
Prasu
1 year ago

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆரம்பமாக உள்ளது.
இதில் பங்கேற்கும் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அதன்படி, இந்தப் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 10 மில்லியன் டொலர்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 04 மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ள நிலையில், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 02 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது



