பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மரணம்
#SriLanka
#Death
#Tamil Student
#University
Prathees
2 years ago
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர், அவர் தங்கியிருந்த இடத்தின் குளியலறையில் விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.