மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த நபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

தனது 9 வயது மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஒரு சந்தேக நபரின் புகைப்படத்தை மாவத்தகம பொலிஸார் வெளியிட்டுள்ளனர், மேலும் அவரைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேடப்படும் நபர் 29 வயதான மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க, 95/02, பிரியந்தி நிவாச, பபுராவ, வலஸ்முல்ல என்ற முகவரியில் வசிக்கிறார்.
தற்போது அவர் கைது செய்யாமல் தப்பித்து வருகிறார். சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் மாவத்தகம பொறுப்பதிகாரிக்கு (OIC) 0372299222 அல்லது 0718591258 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரியுடன் 071859702 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தகவல்களைப் பகிர முடியும்.