'இறைவன்' திரைப்படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #2023 #Tamilnews #Movie
Mani
9 months ago
'இறைவன்' திரைப்படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு

'வாமனன்', 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஹரி. கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த சைக்கோ த்ரில்லர் கதையின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 'ஷேட்ஸ் ஆப் லவ்' என்ற இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜா, அர்மான் மாலிக், ஷிவானி பன்னீர்செல்வம் ஆகியோர் பாடியுள்ளனர். 'இறைவன்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.