கன்னி ராசியினருக்கு திடீர் பயணங்கள் உண்டாகி அலைச்சலை ஏற்படுத்தும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
9 months ago
கன்னி ராசியினருக்கு திடீர் பயணங்கள் உண்டாகி அலைச்சலை ஏற்படுத்தும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: இழுபறியாக இருந்த முயற்சிகள் இன்று நிறைவேறும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். காலையில் மேற்கொண்ட முயற்சி மாலையில் வெற்றியாகும். கார்த்திகை 1: முயற்சிகளில் மதியம் வரை சில தடைகளை சந்திப்பீர்கள். நெருக்கடி தோன்றும். கவனம் தேவை.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: மதியத்திற்கு மேல் செயல்களில் சங்கடம் உண்டாகும். மனதில் குழப்பம் தோன்றும். ரோகிணி: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி பலன் அளிக்கும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் பிரச்னைகள் தோன்றும் என்றாலும் அதை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. திருவாதிரை: வியாபாரத்தின் சூட்சுமங்கள் புலப்படும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். புனர்பூசம் 1,2,3: காலையில் மேற்கொள்ளும் முயற்சி மாலையில் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

கடகம்

புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த முயற்சி மதியத்திற்கு மேல் நிறைவேறும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். பூசம்: வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் அகலும். உங்கள் செயல்களில் லாபம் ஏற்படும். ஆயில்யம்: உறவினர் ஒத்துழைப்பால் வருமானம் அதிகரிக்கும். இன்று மாலையில் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

சிம்மம்

மகம்: எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து முன்னேற்றம் தோன்றும். பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். உத்திரம் 1: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். பெரியோரின் ஆதரவு உண்டு.

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்ப உறவுகள் வழியே ஆதாயம் அடைவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அஸ்தம்: வேலைத் தேடியவர்களுக்கு நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் செயல் வெற்றியாகும். சித்திரை 1,2: திடீர் பயணங்கள் உண்டாகி அலைச்சலை ஏற்படுத்தும் என்றாலும், உங்கள் முயற்சி வெற்றியாகும்.

துலாம்

சித்திரை 3,4: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். சுவாதி: வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நிதிநிலையில் உயர்வு உண்டாகும். புதிய முயற்சி லாபம் தரும். விசாகம் 1,2,3: கடவுள் வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். விஐபிகள் உதவியுடன் நீங்கள் எதிர்பார்த்தவை நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: செயல்களில் தெளிவு உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். கேட்டை: மனம் தெளிவடையும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

தனுசு

மூலம்: மதியத்திற்கு மேல் குடும்பத்தில் குழப்பம் கூடும். பிரச்னைகளை பிறரிடம் கொண்டு செல்ல வேண்டாம். பூராடம்: உங்களை சீண்டிப் பார்க்க சிலர் முயற்சிப்பார்கள். எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர்கள். உத்திராடம் 1: உங்கள் வேலையில் மட்டும் மனதை செலுத்துங்கள். கவனக்குறைவால் சங்கடங்கள் ஏற்படும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: மதியத்திற்கு மேல் எதிர்பாராத செலவு உண்டாகும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும். திருவோணம்: வருவாயைவிட செலவுகள் அதிகரிக்கும். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். அவிட்டம் 1,2: முயற்சி இழுபறியாகும். உங்கள் செயல்களைப் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். 

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் தனித்தன்மையால் மற்றவர் விருப்பத்திற்கு ஆளாவீர்கள். கவுரவம் உண்டாகும். சதயம்: தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உதவியால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 

மீனம்

பூரட்டாதி 4: பழைய பிரச்னையில் முடிவு உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உத்திரட்டாதி: எதிர்பாராத வருமானத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். ரேவதி: வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.