பன்றி சாப்பிடும் வீடியோவை பதிவிட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை

#Arrest #Women #Prison #Food #Muslim #TikTok
Prasu
11 months ago
பன்றி சாப்பிடும் வீடியோவை பதிவிட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை

இந்தோனேசியாவில் பன்றிக்கறி சாப்பிடுவதற்கு முன்னர் இஸ்லாமியர்கள் சொல்லும் ‘பிஸ்மில்லா’ என்ற வாக்கியத்தை சொன்ன இளம்பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் 33 வயதான லினா முகர்ஜி. டிக்டாக் பிரபலமான இவர் கடந்த மார்ச் மாதம் எடுத்த ஒரு காணொளி அண்மையில் வைரலானது. அந்த காணொளியில் லினா, தனது கையில் பன்றி இறைச்சித் துண்டை வைத்துக் கொண்டிருக்கிறார்.

சாப்பிடுவதற்கு முன் இஸ்லாமியர்கள் சொல்லும் ‘பிஸ்மில்லா’ என்ற வார்த்தையை சொல்லி அந்த பன்றிக்கறியை லினா முகர்ஜி சாப்பிடுகிறார். ‘பிஸ்மில்லா’ என்பதற்கு அரபியில் ‘இறைவனின் பெயரால்’ என்று அர்த்தம். 

இந்த வார்த்தையை பயன்படுத்தி இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்ட உணவான பன்றிக்கறியை லினா முகர்ஜி சாப்பிட்ட வீடியோ அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பாலி தீவில் தான் இந்த வீடியோவை லினா எடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பலரும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்ககள் எழுந்தது. இதனையடுத்து இந்தோனேசிய காவல்துறையால் லினா கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும்,$25,200 அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 மேலும் லீனா அபராதத்தை செலுத்தத் தவறினால், அவர்ன் சிறைத் தண்டனை மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.