மகள் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட விஜய் ஆண்டனி

#Twitter #Death #Actor #TamilCinema #Music
Prasu
2 years ago
மகள் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த 19-ம் தேதி அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12ம் வகுப்பு படித்து வந்த மீரா திடீரென தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில், மகள் மீரா குறித்து விஜய் ஆண்டனி உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். 

அதில், "அன்பு நெஞ்ஜங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள்,தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். 

அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள். உங்கள் விஜய் ஆண்டணி," என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!