கொலம்பியாவில் பொலிஸ் நிலையம் அருகே குண்டு வெடிப்பு - இருவர் மரணம்

#Death #Bomb_Blast #Rescue #Colombia
கொலம்பியாவில் பொலிஸ் நிலையம் அருகே குண்டு வெடிப்பு - இருவர் மரணம்

தென்மேற்கு கொலம்பியாவின் கவுகா அருகே உள்ள டிம்பா போலீஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நின்றது. திடீரென இந்த கார் வெடித்து சிதறியது. 

அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். அருகில் உள்ள ஒரு பள்ளி, மருத்துவமனை, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன. 

போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கார் வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதல் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. 

இந்த தாக்குதலில் போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்து உள்ளது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு