இம்ரான்கான் மீது குற்றவியல் சதி வழக்கு

#Arrest #Prison #Pakistan #ImranKhan #Case
Prasu
9 months ago
இம்ரான்கான் மீது குற்றவியல் சதி வழக்கு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த மே 9-ந்தேதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். 

இதைத்தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் போராட்டங்கள், வன்முறை நடைபெற்றது. இதை தொடர்ந்து இம்ரான்கான் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

வன்முறையின்போது ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட அரசாங்க கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

 இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.