மக்களைக் கொன்று நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்க விரும்பவில்லை
#SriLanka
#Parliament
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Kanimoli
2 years ago
மக்களைக் கொன்று நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்க தாம் விரும்பவில்லை எனவும், அரசாங்கத்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை எனவும் மின்சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ்வாறான சிந்தனை கொண்ட ஒருவர் பாராளுமன்றத்திற்கு வந்தால் அந்த நபருடன் பாராளுமன்றத்தில் அமரத் தயாரில்லை என்றார்.
கிராம மக்கள் தன்னை அரசியலுக்காகவும், பௌத்த மக்கள் அரசியலுக்காகவும் தெரிவு செய்ததால் தான் அரசியல் செய்கிறேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.