குரோஷியாவிற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
#Tourist
#world_news
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
குரோஷியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரோஷிய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்த விடயம் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
கழிவு சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி சேவைகள் உட்பட உள்ளூர் உள்கட்டமைப்பை சீர்குலையும் என சுற்றுசூழல் ஆர்வளர்கள் நம்புகின்றனர். இதன்காரணமாக அதிகமான சுற்றுலா பயணிகள் படையெடுப்பானது சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறுகிறார்கள்.
எவ்வாறாயினும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இதுஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.