உயர்தரப் பரீட்சை திகதிகளை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட அறிக்கை
#SriLanka
#Parliament
#Susil Premajayantha
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Examination
Kanimoli
1 year ago

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பரீட்சை ஆணையாளர் தனது அறிக்கையின் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து திருத்தம் செய்யப்பட்ட திகதிகளை எதிர்வரும் வாரத்தில் எரிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பரீட்சைக்கான திகதிகளை எனக்கு இப்போது அறிவிக்க முடியாது என்றும், அது பரீட்சை ஆணையாளரின் பணி என்றும் அவர் எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் திருத்தப்பட்ட பரீட்சைக் கால அட்டவணையை வெளியிடுவார் என்றும் தெரிவித்திருந்தார்.



